வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (22:35 IST)

டிரம்ப்க்கு எதிராக மாறிய சொந்தக் கட்சியினர் !

சமீபத்தில் அதிபர் டிரம்ப் தனது தோல்வியை நீண்ட நாட்கள் கழித்து ஒப்புக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியானது.

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், நடப்பு அதிபர் ட்ரம்பை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இருப்பினும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார்.

இதனிடையே அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப் – ஜோ பிடன் ஆதரவாளர்கள் இடையே வன்முறையும் வெடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து போராட்டம் நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் பலியான நிலையில் நெரிசலில் சிக்கி மேலும் மூவர் உயிரிழந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த கலவரத்திற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது..

மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடனை அதிபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய கையேடு, வெற்றியை அங்கீகரித்து ஜோ பிடனுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்கிறார்.

இந்நிலையில், . இதையடுத்து, அமெரிக்க் தலைநகரில் வன்முறை சம்பவத்திற்காக டிரம்பை பதவிநீக்கும் தீர்மானம்  வரவுள்ளதால் அவர்து சொந்தக் கட்சிக் காரர்கள் அவருக்குஎதிரான வாக்களிக்க உள்ளனர்.

இதனால் டிரம்ப் செய்தறியால தவிப்பில் உள்ளார்.  பதவியில் இருந்துநீக்கப்பட்டால் அவருக்கு அவப்பெயராகும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.