வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 13 ஜனவரி 2021 (19:33 IST)

செல்வராகவன் பட டைட்டில் லுக் ரிலீஸ்… ஹாலிவுட் நடிகர் லுக்கில் தனுஷ்!!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்   உருவாகவுள்ள படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதுபோல் தற்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் டுவிட்டர் பக்கத்தில் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள  படத்தின் டைட்டில் லுக் நாளை( இன்று) வெளியாகவுள்ளதாக செல்வராகவன் வெளியிட்டார்.

இதன்படி தற்போது செல்வராகவனின் 12 வது படத்தின் டைட்டில் லுக் அசத்தலாக வெளியிடபட்டுள்ளது.

இதில், செம ஸ்டைலிஸாக நடிகர் தனுஷ்,  கருப்பு சட்டையில் கண்ணாடி போட்டுக்கொண்டு, ஹாலிவுட் நடிகர் போன்று பின்னால் கட்டிடம் எரிவது போலுள்ள போஸ்டரில் டைட்டில் நனே வருவேன் என்ற டைட்டில் இடம்பெற்றுள்ளது. இக் காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், செல்வராகவன் அடுத்து எப்போது படம் எடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது, அவர் தனது தம்பியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்குவதாக அறிவித்ததுதான் தாமதம் இந்தியா முழுவதும் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு கூடிவிட்டது. இந்நிலையில் செல்வராகவன் இன்று நானே வருவேன் என்ற தனது 12 வது படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளார். இதனால் மேலும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இசையமைப்பாளர் யுவன் இப்படத்தின் டைட்டில் லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெள்யிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.