வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (18:08 IST)

அல்கொய்தா தலைவர் கொலை: ஜோ பைடனுக்கு ஒபாமா பாராட்டு!

obama
அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் நேற்று கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்
 
அமெரிக்காவை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா, அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்த்தது என்பதும் அதற்கு பதிலடியாக அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின்போது பின்லேடன் கொல்லப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது புதிய அல்கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஒபாமா இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் 
 
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பதிலடியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாதியின் முளையாக செயல்பட்டு அல்கொய்தாவின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பாராட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்