வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (14:59 IST)

அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் மிக்ஸிங்… ரஹ்மான் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தற்போது அமெரிக்காவில் இசை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இசை நிகழ்ச்சிக்காக ரஹ்மான் அமெரிக்காவில் இருப்பதால் அவரால் இந்த பாடல் வெளியீட்டில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் படத்துக்கான பின்னணி இசை மிக்ஸிங் பணிகள் நடந்து வருவதாக புகைப்படத்தோடு அப்டேட் வெளியிட்டுள்ளார் ரஹ்மான்.

பொன்னி நதி பாடல் சில விமர்சனங்களைப் பெற்றாலும் , இணையத்தில் பரவலாக ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகிறது.