1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (08:16 IST)

அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

alqueda
அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!
அல்-கொய்தா தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
அல்கொய்தா தலைவராக பின்லேடன் இருந்தபோதுதான் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட என்பதும் அதன் பின்னர் குறிவைத்து அமெரிக்க ராணுவம் பின்லேடனை கொன்றது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி என்பவர் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.
 
அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஆப்கானிஸ்தானில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது