திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 9 மே 2019 (13:40 IST)

சீட் கொடுக்கல; ஓபிஎஸ்-ம் கண்டுக்கல... கட்சி தாவும் முக்கிய புள்ளிகள்..?

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அவர் மீதுள்ள அதிருப்தி காரணமாக தினகரன் கட்சியில் இணைய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தமிழகத்தில் 18 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 19 ஆம் தேதி திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. 
 
இந்நிலையில் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது அவருக்கு ஆதர்வாக இருந்த சிலர் தற்போது தினகரன் கட்சிக்கு தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆம், சீட் கிடைக்காத விதக்கிதியில் சிலர் தினகரனுடன் கைக்கோர்க்க உள்ளனராம். 
ஓ.பன்னீர்செல்வத்தால் தனது ஆதரவாளர்களுக்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால், தனது மகனுக்கு மட்டும் சீட் வாங்க முடியும். மகனுக்கு சீட் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை அவர் தனது ஆதரவாளர்கள் மீது காட்டவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனராம். 
 
மேலும் ஜெயலலிதா இருந்தவரை கட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சீட் கிடைக்கும். ஆனால் இப்போது சாதியை பார்த்தும், யாருடைய ஆதரவாளர் என்பதை பார்த்தும் சீட் வழங்கப்படுகிறது என தெரிவிக்கின்றன. 
 
இதனால், கடும் அதிருப்திலும் விரக்தியிலும் உள்ள அதிமுகவின் சில முக்கிய புள்ளிகள் அமமுக அல்லது திமுக பக்கம் போய்விடலாமா என சிந்தித்து வருகின்றனராம். இது அதிமுகவிற்கு கடும் பின்னடைவாகவே பார்க்க்கப்படுகிறது.