1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (08:56 IST)

தமிழர்கள் பிரதமர் ஆவதை தடுத்ததே திமுகதான் – தமிழிசை ஆவேசம் !

தமிழர்களுக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு வரும்போது அதைத் தடுத்ததே திமுகதான் எனத் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சந்திப்புக்கு அனுமதி கேட்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை ஸ்டாலின் சந்திக்காதது அரசியல் உலகில் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதனால் மூன்றாவது அணியில் தாங்கள் இல்லை என்பதை திமுக உறுதியாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அதில் ‘ ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் எனும் நாடகம் ஆடிப் பார்த்திருக்கிறேன். ஆனால் தேசிய அரசியலிலும் நாடகம் ஆடுவதை இப்போதுதான் பார்க்கிறேன். திமுக பொருளாளர் துரைமுருகன் ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் ஜனாதிபதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார். மற்றக் கட்சியினர் கலாய்த்தது போக இப்போது சொந்த கட்சிக்குள்ளாகவே அவர் காலை வார ஆரம்பித்து விட்டனர். மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு வந்ததை தடுத்ததே திமுகதான். அதேப் போல அப்துல் கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவதை தடுத்ததும் திமுகதான். அதனால் தமிழர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதி போன்ற பதவிகளில் அமர்வதைத் தடுத்ததே திமுகதான்’ எனக் கூறியுள்ளார்.