புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 8 நவம்பர் 2017 (17:28 IST)

இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து!!

பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.


 
 
பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி, காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படும் வரை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு பதற்றமாகவே இருக்கும். 
 
ஆனாலும், இப்பிரச்சினைக்கு போர் தீர்வாகாது. இந்தியாவுடன் போரிடும் எண்ணமில்லை. ஏனெனில் இது நடைமுறையில் சாத்தியமில்லை. பேச்சுவார்த்தையே அனைத்திற்கும் சரியான வழி என கருதுகிரேன் என கூறியுள்ளார்.
 
மேலும், தீவிரவாதிகளுக்கு எதிரான மிகப் பெரிய போரை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 4-ல் 1 பங்கு வீரர்கள் இப்பணியில ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.