செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (21:06 IST)

வடகொரியாவில் கடலுக்கு அடியில் அணு ஆயுத சோதனை

North Korea
வடகொரியாவில் கடலுக்கு அடியில், ஹெயின்-2 என்ற பெயரில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தென்கொரியா மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட  நாடுகளுக்கும், அமெரிக்காவும் பெரும் குடைச்சலாக இருக்கும் நாடு வடகொரியா. அவ்வப்போது, அணு ஆயுதிய சோதனை மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வருவதால், அண்டை நாடான தென்கொரியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி, இரு நாட்டுப் படைகளும் கூட்டுப்பயிற்சி செய்துவருவதும் வடகொரியா ஆத்திரமடைந்து, மேலும் ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொருளாதாரத் தடை விதித்தபோதிலும், அங்கு பொருளாதாரத் தட்டுப்பாடுகள், உணவுத்தட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அதிபர் கிம் இதைப்பற்றி கவலைப்படவில்லை.

இந்த நிலையில், வடகொரியாவில் கடலுக்கு அடியில், ஹெயின்-2 என்ற பெயரில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளது.இது, செயற்கையாய் கடலில் சுனாமியை ஏற்படுத்தி, எதிரிகளின் கடற்படைகளை அழிக்கும் வகையில் இச்சோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.