திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (22:36 IST)

அமெரிக்காவின் நெருக்கத்தால் மிரட்டும் சீனா - தைவான் சிக்கலில் இருக்கிறதா?

China
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தைவான் அதிபர் சாய் இங்-வென், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி இடையேயான சந்திப்புக்கு பதிலளிக்கும் விதமாக சீனா ராணுவ ஒத்திகையை தொடங்கியுள்ளது.
 
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஹட்சன் கல்வி நிறுவனம் சாய் இங்-வென்னுக்கு சர்வதேச தலைமைத்துவ விருது விழங்கி கௌரவித்த நிலையில், ஒரு வாரத்திற்கு பின் கலிஃபோர்னியாவில் புதன்கிழமையன்று இருவருக்கும் இடையேயான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
 
அமெரிக்கா - தைவான் இடையேயான உறுதியான, தனித்துவ கூட்டாண்மையை சாய் பாராட்டி பேசினார். இதேபோல், தைவானுடனான தங்களின் ஆயுத விற்பனை தொடரும் என்று மெக்கார்த்தி கூறினார்.
 
தங்களின் ஒருபகுதிதான் தைவான் என்று கூறிவரும் சீனாவுக்கு இந்த சந்திப்பு ஆத்திரமூட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தைவானை சுற்றியுள்ள பகுதிகளுக்கு போர் கப்பல்களை அனுப்பியுள்ளது.