திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (22:23 IST)

ஓவியாவுக்கு நடந்த ஆபரேசன்: புதிய ஹேர்ஸ்டைலின் ரகசியம் இதுதானா?

பிக்பாஸ் சூப்பர் ஸ்டார் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து கொண்டார். பின்னர் டாக்டர்களின் அறிவுரையின்படி   கப்பிங் தெரபி என்ற சிறிய வகை ஆபரேசனையும் செய்து கொண்டார்



 
 
கப்பிங் தெரபி என்பது காதுக்கு மேல் செய்யக்கூடிய ஒரு சிறிய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை செய்தபோது அந்த பகுதியின் முடி அகற்றப்பட்டது. பின்னர் ஆபரேஷன் முடிந்ததும் இதையே புதிய ஹேர்ஸ்டைலாக மாற்றிவிட்டார். இருப்பினும் அவர் ஆபரேஷன் செய்த தழும்பை மறைக்காததால் தற்போது உண்மை வெளிவந்துவிட்டது.
 
இந்த நிலையில் கோலிவுட்டில் மட்டுமின்றி மலையாள திரையுலகில் இருந்தும், தெலுங்கு திரையுலகில் இருந்து ஓவியாவுக்கு வாய்ப்பு குவிகின்றதாம். ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பது முக்கியமில்லை என்றும், ஓவியா பூரண குணம் அடைய வேண்டும் என்றும் அவரது தந்தை கறாராக கூறிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது