வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 29 ஜூலை 2017 (13:48 IST)

அமெரிக்காவை நினைத்த நிமிடத்தல் தாக்குவோம்: வடகொரியா பகிரங்க சவால்!!

அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் நினைத்த நேரத்தில் தாக்குவோம் என வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 


 
 
அமெரிக்காவை குறி வைத்து பல்வேறு செயல்களை செய்து வருகிறது வட கொரியா. அதிலும் ஏவுகணை சோதனை அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியாக உள்ளது.
 
புதிய ஏவுகணை ஒன்றை சோதனையிட்ட பின்னர் கிம் பின்வருமாறு கூறினார். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் ஏவும் வகையில் எங்களது ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளையும் தற்போது எங்களால் தாக்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.