திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2017 (09:08 IST)

நீங்கள் பார்த்தது பாதி உண்மைதான் - பிக்பாஸ் ரகசியம் உடைக்கும் நமீதா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நமீதா, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பாதி உண்மை’ என்கிற தலைப்பில் ஒரு பதிவை இட்டுள்ளார்.


 

 
அதில் அவர் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் கூறுவது போலத்தான் இருக்கிறது. ஆனால், எந்த இடத்திலும், அது பிக்பாஸ் பற்றியது என அவர் குறிப்பிடவில்லை. ஆங்கிலத்தில் அவர் எழுதியிருக்கும் அந்த பதிவின் தமிழாக்கம் இது:
 
நீ காலையில் முகத்தில் புன்சிரிப்புடன் எழுவாய். ஆனால், உன்னை ஒருவர் தூண்டிவிட்டு உன் நிம்மதியை உடைப்பார். தூள் தூளாக உடைந்த துகள்களை எடுத்து நீ அந்த நாளை தொடருவாய். ஆனால், அந்த பெண் மீண்டும் அடிப்பார். 
 
ஒரு கட்டத் பொறுமை இழப்பாய்.  ஆனால் அங்கிருக்கும் அனைத்து விரல்களும் உன்னை நோக்கியே இருக்கும். உன்னை பற்றி அவர்கள் பேசுவது உனக்கு கேட்கும். 


 

 
அந்த நிகழ்ச்சியின் இயக்குனர்கள் ஏமாற்றுவதில் வித்தகர்கள். உனக்குள் இருந்த நம்பிக்கை நரகக் குழியாக மாறும். ஒரு முழு நாளை ஒரு மணி நேரமாக சுருக்க முடியும். அப்படி செய்யும் போது உண்மைகள் மாறும். அது பாதி உண்மை மட்டுமே. நீங்கள் அனைவரும் பார்த்தது மீதி பாதிதான்.
 
நீங்கள் யாரும் அந்த நிகழ்சியை கவனிக்கவில்லை. பார்க்க மட்டுமே செய்தீர்கள். உண்மைதான் உன்னை வெளிக்கொண்டு வரும். அதுவரை கம்பீர முகத்தோடு சிரி. வரிகளுக்கிடையே உள்ள செய்தியை உங்களால் புரிந்து கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எந்த இடத்திலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி என குறிப்பிடவில்லை என்றாலும், அவர் அதைப்பற்றித்தான் எழுதியிருக்கிறார் என தெளிவாக தெரிகிறது.