அமெரிக்காவுக்கு சவாலாக உளவு செயற்கைகோளை ஏவும் வடகொரியா
உளவு செயற்கைகோளை வடகொரியா ஏவ உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டி, இரு நாட்டுப் படைகளும் கூட்டுப்பயிற்சி செய்துவருவதும் வடகொரியா ஆத்திரமடைந்து, மேலும் ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொருளாதாரத் தடை விதித்தபோதிலும், அங்கு பொருளாதாரத் தட்டுப்பாடுகள், உணவுத்தட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அதிபர் கிம் இதைப்பற்றி கவலைப்படவில்லை.
சமீபத்தில் வடகொரியாவில் கடலுக்கு அடியில், ஹெயின்-2 என்ற பெயரில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டுள்ளது.இது, செயற்கையாய் கடலில் சுனாமியை ஏற்படுத்தி, எதிரிகளின் கடற்படைகளை அழிக்கும் வகையில் இச்சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், வடகொரியா தன் முதல் ராணுவ உளவு செயற்கைகோளை உருவாக்கியுள்ளதாகவும், அதை திட்டமிட்டபடி ஏவ வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இன்று வடகொரிய விண்வெளி நிறுவனத்திற்குச் சென்ற அதிபர் கிம் ஜாங்க், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அப்போது இந்த உளவு செயற்கைக்கோள் தகவல்கள் சேகரிக்கவும் அமெரிக்கா தலைமமையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்க்கொள்ளும் வகையில் அமைய வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.