1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (21:25 IST)

இலவசத்தை நம்பி ஏமாந்து உதடு வீங்கிய மாடல் அழகி

america
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி பெண் ஒருவர் இலவசதிதிற்கு ஆசைப்பட்டு லிப்பில்லர் செலுத்தியதால் உதடு வீங்கிக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜெசிகா புர்கோ. இவர்  உடல் அழகுக்காக பலவகைச் சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், தன்  உதட்டை மேலும் அழக்காக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையி,  லிப் பில்லர் எனப்படும் சிகிச்சை இவர் பலமுறை எடுத்துள்ள நிலையில்,  மீண்டும் அதே சிகிச்சையை மேற்கொள்ள அவர் முடிவெடுத்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து குறிப்பிட்ட மருத்துவமனையின் டாக்டரிடம் அவர் ஆலோசனை செய்தார்.

அப்போது,  மருத்துவர், புதிய லிப் பில்லர் வந்துள்ளதாகவும் அதை உங்களுக்கு இலவசமாகத் தருவதாகவும் கூறியுள்ளார்.

இதையேற்று, ஜெசிகா, மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரிடம் லிபில்லர் சிகிச்சைக்குச் சம்மதித்தார்.

உடனே மருத்துவரும், ஜெசிகாவில் உதட்டில் லிப் பில்லரைச் செலுத்தினார்.

ஆனால், சில நிமிடங்களிலேயே அவருக்கு உதவு வீங்கத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெசிந்தா இதுகுறித்து, மனவேதனையடைந்து  சமூகவலைதளத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில், இலவசத்தை   நம்பியதால் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உரிய மருந்துகள் எடுத்துவருவதால் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்று கூறியுள்ளார்.