வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 மே 2018 (14:57 IST)

30 நிமிடத்தில் ஒரே நேர மண்டலத்திற்கு வந்த கொரிய நாடுகள்!

வடகொரியா அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் எழுந்தது. வடகொரியா மீது ஐநா சபையும் அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்தன. 
 
அதன் பிறகு தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் இந்த போர் நிலையை மாற்றியது. அதன்பின் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று அதிபர் கிம்மை சந்தித்து பேசினர்.
 
அதன் பின்னர் சமீபத்தில் நடந்த உச்ச மாநாட்டில் இரு நாட்டு அதிபர்கலும் கலந்துக்கொண்டனர்.  இந்த நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. 
 
இந்நிலையில், தென் கொரியாவைவிட, அரை மணிநேரம் பின்னதாக தனது நேரத்தை வைத்து இருந்தது வடகொரியா. எனவே, நேற்று நள்ளிரவு வடகொரியா, 11.30க்கு தனது நேரத்தை அரை மணி நேரம் முன்னதாக மாற்றியது. 
 
ஒரே நாள் இரவில் நடந்த மாற்றத்தால் இருநாடுகளும் ஒரே நேர மண்டலத்திற்குள் வந்துள்ளன. இருநாடுகளிடையேயான உறவில் இது மேலும் ஒரு புதிய மாற்றமாக இந்த முயற்சி நடந்துள்ளது.
 
இந்த நெகிழ்வு தரும் நிகழ்வை உலகம் முழுவதும் பல்வேறு நாட்டு தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.