திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:13 IST)

உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசு எழுத்தாளர் காலமானார்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவரும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களுக்கு நெருக்கமானவருமான டோனி மாரீசன் இன்று காலமானார் அவருக்கு வயது 88. டோனி மாரீசன் மறைவிற்கு உலகிலுள்ள இலக்கியவாதிகள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
ஆப்பிரிக்க - அமெரிக்கரான டோனி மாரிசன் தன்னுடைய நாற்பதாவது வயதில் ‘தி ப்ளூஸ்ட்' என்ற முதல் நாவலை எழுதி வெளியிட்டார். அந்த நாவலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் அவர் எழுதிய அடுத்த நாவலான 'அன்புக்குரியவர்' என்ற நாவல் உலகப் புகழ் பெற்றது மட்டுமின்றி ஹாலிவுட்டில் திரைப்படமாகவும் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது 
 
இந்த நிலையில் 1993 ஆம் ஆண்டு டோனி மாரிசன் அவர்களுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் 1996 ஆம் ஆண்டு அமெரிக்க இலக்கியத்தில் அவரது பங்கை கௌரவம் செய்யும் வகையில் தேசிய புத்தக அறக்கட்டளை பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் ஜனாதிபதி அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் இருந்தும் அவர் சுதந்திரப் பதக்கம் ஒன்றையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எழுத்தாளர் டோனி மாரிசன் மொத்தமே 11 நாவல்கள் மட்டுமே எழுதி இருந்தாலும் அவை அனைத்துமே உலகப்புகழ் பெற்றது என்பதுதான் அவருடைய மிகச்சிறந்த சிறப்பு ஆகும். டோனி மாரிசன் மறைவிற்கு முன்னாள் அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். டோனி மாரிசன் கறுப்பின மக்களுக்காக தனி மொழியை உருவாக்கி தமது இலக்கிய படைப்புகளை உருவாக்கியவர் என்றும் அமெரிக்காவின் பன்முக கலாச்சாரத்தை உலகிற்கு உரக்க தெரிவித்த ஒரு உன்னதமான எழுத்தாளர் என்றும் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்