வருகிறது கேம் ஆஃப் த்ரோன்ஸ் அடுத்த பாகம் – எழுத்தாளர் அறிவிப்பு !

Last Modified செவ்வாய், 16 ஜூலை 2019 (13:41 IST)
கேம் ஆஃப் த்ரோன்ஸ் சீரிஸின் அடுத்த பாகம் உருவாகிவருவதாக அதன் எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் அறிவித்துள்ளார்.

அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டினால் எழுதப்பட்ட பிரபல நாவலான எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் சாங்-ஐ தொலைக்காட்சித் தொடருக்காக கேம் ஆஃப் த்ரோன்ஸ் என்ற பெயரில் சீரிஸாக எடுத்தனர். ஹெச் பி ஓ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் அதிகப் பார்வையாளர்களை பெற்ற சீரிஸாக சாதனை படைத்தது.

மொத்த 8 சீசனாக ஒளிப்பரப்பான இந்த சீசன் கடந்த மாதத்தோடு முடிவடைந்தது. இந்நிலையில் இதன் முந்தையப் பாகம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஆரம்பிக்கும் போது ஒருப் புரட்சிக்குப் பின்னர் ஆட்சியமைத்த 7 சாம்ராஜ்யங்களுக்குள் எழும் அதிகார வெறியை மையமாக இருந்தது. ஆனால் இப்பொது உருவாகும் முந்தையப் பாகம் புரட்சிக்கு முந்தையக் காலத்தில் இருந்த 10 சாம்ராஜ்யங்களின் கதையைப் பேசும் எனக் கூறப்படுகிறது.

‘தி லாங்கஸ்ட் நைட்’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இத்தொடருக்கான பைலட் ஷூட் கடந்த மே மாதம் தொடங்கியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :