1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:26 IST)

WWE-ல்-ரீ எண்ட்ரீ கொடுத்த CM பங்க்...ரசிகர்கள் மகிழ்ச்சி

wwf cm punk
9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிஎம். பங், WWE-ல்-ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உலகளவில் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது WWE இன்று  நிறைய வீடியோ கேம்ஸ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மலிந்துவிட்ட போதிலும், 80 's மற்றும் 90 's கிட்ஸ்களின் அன்றைய பொதுபோக்கு அம்சமாக இருந்தது இந்த குத்துச்சண்டை விளையாட்டுதான்.
 
இப்போதும் இதற்கென பிரத்யேகமாக ரசிகர்கள் உள்ளனர்.
 
குத்துச் சண்டையில் இருந்து பிரபல வீரர்காள் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், ராக், எட்ஜ், ஜான் சீனா, பட்டீஸ்டா உள்ளிட்ட வீரர்கள் சினிமாவில் நடித்து கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில், WWEவிளையாட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவரும் அதிகளவில் ரசிகர்களை கொண்டவருமான  CM பங்க்  9 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2014ல் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெளியேறினார்.
 
இந்த நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சிஎம். பங், WWF-ல்-ரீ எண்ட்ரீ கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.