1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (08:10 IST)

இந்த பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை. ராஜினாமா செய்த நியூசிலாந்து பிரதமர்!

newzeland
இந்த பதவியை தொடர என்னிடம் ஆற்றல் இல்லை எனக் கூறிய நியூசிலாந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நியூசிலாந்து பிரதமராக பணியாற்றி வந்த ஜெசிந்தா ஆர்டெர்ன் என்பவர் தனது பதவியை அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் 
 
மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.  தனது ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த ஜெசிந்தா ஆர்டெர்ன், பிரதமரின் இந்த பதவி குறித்து நன்கு அறிவேன் என்றும் இனி இந்த பதவியை தொடர்வதற்கு என்னிடம் போதுமான ஆற்றல் இல்லை என்பதை உணர்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்ராஜினாமா செய்யப்பட்டதை அடுத்து விரைவில் அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva