வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2024 (07:59 IST)

நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். பெருமை கொண்ட நியூசிலாந்து பிரதமர்..!

இந்தியா - ஆசியான்  உச்சி மாநாடு நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ளார்.

அங்கு நடைபெறும் ஆசியான்  மாநாட்டில் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் என்பவரை மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் பேட்டி அளித்தார்.

அப்போது, "நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். இந்திய நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன், மிகவும் மதிக்கிறேன்," என்று கூறினார். நியூசிலாந்தில் உள்ள இந்தியர்கள் திறமையாக பணி செய்து வருகிறார்கள் என்றும் அவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் உத்வேகம் அளிப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

"பிரதமர் மோடி உடனான சந்திப்பு அற்புதமாக இருந்தது," என்றும், "இந்தியாவுக்கு வருமாறு அவர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார், சரியான நேரத்தில் கண்டிப்பாக நான் இந்தியா செல்வேன்," என்றும், "இந்தியா-நியூசிலாந்து இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவோம்," என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Siva