1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (16:06 IST)

ஒரு ட்வீட்டை எத்தனை பேர் பார்த்துள்ளனர் ? டுவிட்டரில் புதிய அப்டேட்....

Twitter
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் அதில் இருந்து முக்கிய அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நீக்கியதும் எலான் மஸ்க் மீது விமர்சனம் எழுந்துள்ளது.

இதையடுத்து, டுவிட்டரில் ப்ளூ டிக் வைத்துள்ளவர்களுக்கு மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் என்று அறிவித்து  பயனர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில், டிவிட்டர் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ள எலான் மஸ்க், தொடர்ந்து, முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

அதில், ஒவ்வொரு டிவிட்டையும் இனிமேல் எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்று பார்க்க முடியும். இது டிவிட்டரில் பெறுகிற லைக்குகள் மற்றும் ரீ டுவீட்டை விட அதிக பார்வையாளர்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.