1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:41 IST)

எலான் மஸ்க், ஜெப் பிஜாஸ் சொத்து மதிப்பு குறைவு: அதானி முதலிடம் பிடிப்பாரா?

Adani
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மற்றும் அமேசான் நிறுவனம்  ஜெப் பிஜாஸ் ஆகியவர்களின் சொத்து மதிப்பு குறைந்து வருவதை அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்புள் இருப்பதாக கூறப்படுகிறது.
 
 உலக பணக்காரர் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் எலான் மஸ்க்,  இரண்டாவது இடத்திலும் ஜெப் பிஜாஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் அதானி ஆகியோர் உள்ளார்கள்.
 
இந்த நிலையில் நேற்று அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்தது அடுத்து எலான் மஸ்க் மற்றும் ஜெப் பிஜாஸ் சொத்து மதிப்பு குறைந்தது.  அதே நேரத்தில் அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து விரைவில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
முதல் முறையாக இந்திய தொழில் அதிபர் ஒருவர் முதல் இடத்தை பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.