1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 7 ஜூலை 2022 (16:03 IST)

9 குழந்தைகளுக்கு தந்தையானார் எலான் மஸ்க்: அலுவலக பெண்ணுக்கு இரட்டை குழந்தை!

Elon
டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் அவர்களுக்கு ஏற்கனவே ஏழு குழந்தைகள் இருந்த நிலையில் தற்போது அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதால் மொத்தம் 9 குழந்தைகள் அவருக்கு உள்ளது என கூறப்படுகிறது
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டதாகவும் ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் பெயர் வைக்க அனுமதி கேட்டபோது தான் இந்த தகவல் வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது 
 
டெஸ்ல அலுவலகத்தில் பணிபுரிந்த ஷிவோன் சிலிஸ் என்ற பெண் மூலம்தான் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே முதல் மனைவி மூலம் 2 குழந்தைகள் இரண்டாவது மனைவி மூலம் 5 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது ரகசிய உறவின் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறப்படுகிறது