திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (13:16 IST)

ட்ரெண்டாகும் “வேக்கம் சேலஞ்ச்” அடிமடியில் ஆபத்து

இணைய உலகில் ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு வகையான சேல்ஞ்ச்கள் ட்ரெண்டாகி வருகிறது. ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகீ சேலஞ்ச், காக்ரோச் சேலஞ்ச் போல தற்போது வேக்கம் சேலஞ்ச் என்ற நூதனமான போட்டி ஆரம்பித்திருக்கிறது. குப்பைகள் கொட்டும் பைக்குள் ஆட்கள் உட்கார்ந்து கொள்கிறார்கள். அதற்குள் ஒருவர் குப்பை சுத்தம் செய்யும் வேக்கம் மெஷினின் குழாயை வைத்து ஆன் செய்து விடுகிறார். உடனே பிளாஸ்டிக் பை சுருங்கி உடலோடு இறுகி ஒட்டிக்கொள்கிறது. அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இளைஞர்கள் தாங்கள் இதுபோன்ற சேலஞ்ச்களில் விளையாடுவது மட்டுமல்லாமல் குழந்தைகளை வைத்தும் இது போன்ற நூதன விளையாட்டுகளை மேற்கொள்கிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் காமெடியாகவும், பொழுதுபோக்காகவும் தெரியும் இந்த விளையாட்டுகளில் ஆபத்தும் இருக்கவே செய்கின்றன. எனவே அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்தான விளையாட்டுகளை தவிர்க்குமாறு சிலர் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் வேண்டுதல் விடுத்தும் வருகின்றனர்.