வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (18:26 IST)

தேன் கூட்டில் கல்லெறிய கூடாது – ஸ்டாலின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் மும்மொழி கல்வி கொள்கையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் “மும்மொழி கல்வி கொள்கையை தமிழ்நாட்டில் கொண்டு வந்தால் பேரிடரை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் “பதவியேற்ற உடனே தமிழகத்துக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்திக் கொண்டு வருகிறது. தற்போது மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. இருமொழி கொள்கை என்ற தேன் கூட்டிலே கல்லெறிய வேண்டாம். மும்மொழி கொள்கை தமிழ்நாட்டில் வந்தால் பேரிடரை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன். இதை கண்டும் காணாமல் இருக்கும் எடப்பாடி அரசு உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் கட்சியின் பெயரில் உள்ள அண்ணா என்ற பெயரையும், திராவிட என்ற பெயரையும் நீக்கிவிட வேண்டும்” என கூறியுள்ளார்.