பெர்முடா முக்கோண மர்மத்துக்கு புதிய விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்!!
அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மம் நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது. தற்போது அது குறித்த புதிய விளக்கத்தை விஞ்ஞானிகள் அளித்துள்ளனர்.
5,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த முக்கோண கடல் பகுதியை ராட்சச பகுதி என கருதப்படுகிறது. இந்நிலையில், இந்த வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்கள் மாயமாவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். தற்போது, அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் நடத்திய ஆய்வில், பெர்முடா முக்கோண பகுதிக்கு மேல் உள்ள மேகங்கள் நீர் கோளங்களால் சூழப்பட்டு ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் தான் இவ்வாறு நடக்கிறது என கூறப்பட்டுள்ளது.
இதனை தெளிவுபடுத்தும் வகையில், ரேடார் செயற்கைக் கோளை பயன்படுத்தி மேகங்களுக்கு கீழ் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்தனர்.
இதில் கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது. மேலும், பெர்முடா முக்கோணப் பகுதிக்கு மேலிருக்கும் மேகக்கூட்டங்கள் அறுகோண வடிவில் காணப்படுவதாகவும், இவை 32 முதல் 80 கிலோமீட்டர் வரை பரந்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெர்முடா கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் எழும்புவதால், 45 அடி உயரத்திற்கு சக்தி வாய்ந்த அலைகள் உருவாகி, விமானங்கள் மற்றும் கப்பல்களை நிலைகுலைய வைத்து கடலில் முழ்க செய்வது உறுதிபடுத்தபட்டுள்ளது.