வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 மே 2023 (23:20 IST)

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்காக புதிய ஆதாரம் கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்காக புதிய ஆதாரங்களை சீனாவின்  ஜூராங்க் ரோவர் கண்டுபிடித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான  ஏற்படுகளை நாசா, உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்த நிலைய்ய்ல், சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் சமீபத்தில் ஜூராங் ரோவரை  கடந்த 2021 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது.

இந்த நிலையில், இந்த விண்கலம் ஜூராங் ரோவர் உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பின் அடுக்கிலும் நீரேறப்பட்ட சல்பேட்டடுகள், நீரேற்றப்பட்ட சிலிக்கான், இரும்பு ஆக்சைடு தாதுக்கள், குளோரைடுகளால் நிறைந்திருப்பதாக கண்டுபிடித்தனர்.

அதன்மூலம், செவ்வாய் கிரகத்தில்மக்க வாழ்வதற்கான  சூழ்நிலைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், செவ்வாய் கிரகத்தில் பூமியைப் போன்ற கால நிலை உள்ளதாகவும்,  3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அதன் மேற்பரப்பில், கடல் பாய்ந்திருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலம்  நம்பிக் கொண்டிருப்பதாக சீனன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.