1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (21:56 IST)

சூடானில் உள் நாட்டு கலவரம்...413 பேர் உயிரிழப்பு, 3551 பேர் படுகாயம்

sudan
சூடானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. எனவே ராணுவத் தளபதிகளாக  இறையாண்மை அமைப்பு என்ற பெயரில் ஆட்சி  நடத்தி வருகின்றனர்.
 

இந்த நிலையில், ராணுவ ஆட்சியில் இருந்து மீண்டும் ஜனநாயக ஆட்சிக்கு திரும்ப வேண்டுமென்ற முன்மொழிவின்படி, ராணுவத்துடன் , துணை ராணுவப்படையை இணைப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் தினமும் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த நாட்டில் சிக்கியுள்ள 3000 க்கும் அதிகமான இந்தியர்களை மீட்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்த நிலையில், இதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பல நாடுகளும் இதுகுறித்து ஆலோசனை செய்து வருகிறது.

தற்போது, அந்த நாட்டின் கார்டூம் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு தாக்குதல்   நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் அங்கிருந்து  வெளியேறி வருகின்றனர்.

இத்தாக்குதலில் இதுவரை 413 பேர் பலியாகியுள்ளனர். 3551 பேர் படுகாயமடைந்துள்ளதாக உலக சுகாதார மைய செய்தி தொடர்பாளர் மார்க்ரேட் ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.