திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 7 மே 2020 (07:37 IST)

ஒரு லட்சத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை: அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் தினந்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேலானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகி வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2524 பேர் பலியாகி உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் அமெரிக்க மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனானாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 74,795ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு லட்சத்தை நெருங்கிவிடும் என அஞ்சப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் இதுவரை 12.6 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனானாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில்பேருக்கு 25,254 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவில் இதுவரை பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 12,62,887ஆக உயர்ந்துள்ளதாகவும் அமெரிக்க சுகாதார துறை அறிவித்துள்ளது
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயின் நாட்டில் 253,682 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 214,457 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்தில் 201,101பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 174,191 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 168,162 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யாவில் 165,929பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
மேலும் உலக அளவில் 38,21,917பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 265,051 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 52,987 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,785 கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.