1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (11:30 IST)

கோல்ப் மைதானத்தில் தாக்கிய மின்னல்: 6 பேர் படுகாயம்

அமெரிக்காவில் உள்ள ஒரு கோல்ப் மைதானத்தில் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென தாக்கிய மின்னல் காரணமாக ஆறு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்று வரும் பிஜிஏ டூர் சாம்பியன்ஷிப் கோல்ப் போட்டியில் நேற்று ஒரு முக்கிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்த நிலையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென புயல் காற்று வீசியது. இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
 
இந்த நிலையில் அங்கு திடீரென மின்னல் தாக்கியது. இதில் ஒரு மரத்துக்கு அடியில் நின்றிருந்த 6 ரசிகர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது
 
மேலும் கோல்ப் மைதானத்தில் மினல் தாக்கியபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களிலும், ஃபேஸ்புக், டுவிட்டர், உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஏராளமானோர் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.