1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Metro train service in Chennai till 9 pm

சென்னையில் ‘இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை’

Metro train service
உலகம் முழுவதும்  கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்தது. எனவே, 140 நாட்களுக்குப் பிறகு  ஊரடங்கு சிலதளர்வுகளுடன் தளர்த்தப்பட்டது.

ரெயில், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையில்  இன்றிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை இயங்கும் என  மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏற்கனவே காலை ஏழு மணியில் இருந்து இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் இன்றிலிருந்து கூடுதலாக ஒரு மணி நேரம் இயக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் சர்ச்சையாகும் பசுவதை தடைச் சட்டம் - என்ன நடக்கிறது?