1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (09:11 IST)

செவ்வாய் கிரகத்துல இருக்க மாதிரியே இருக்கும்! – நாசா அளிக்கும் இலவச பயிற்சி!

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் தங்கியிருந்து பயிற்சி பெற பொதுமக்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு ஹூஸ்டன் அருகே செயற்கையாக செவ்வாய் கிரகம் போன்ற சூழலை நாசா உருவாக்கியுள்ளது.

இந்த சூழலில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்பது குறித்து ஆராய அந்த செயற்கை அமைப்பில் தங்கி பயிற்சி பெற தன்னார்வலர்களுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. இதில் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றாலும் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருவதாக கூறப்படுகிறது.