1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (14:26 IST)

மனித பற்களுடன் காணப்பட்ட ஆட்டுத்தலை மீன்

மனிதர்களை போல பற்கள் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டபிடிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த சுவாரசியமான பத்து தகவல்கள் இதோ: வடக்கு கரோலினாவில் ஜென்னட் பியர் என்ற மீன்பிடி தலத்தில் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஜென்னட் பியர் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது.
 
இது ஆட்டுத்தலை மீன் என்று அறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை மீன்களுக்கு இரையை நன்கு கடித்து திண்ண ஏதுவாக வரிசையான கடைவாய்ப்பற்கள் இருக்கும்.
 
இந்த மீனின் வாய் ஆட்டின் வாயைப் போல உள்ளதால் இந்த மீனுக்கு ஆட்டுத்தலை மீன் என்று பெயர் வந்தது. அந்த மீன்பிடி தலத்துக்கு வழக்கமாக வந்து செல்லும் நாதன் மார்டின் என்பவரின் கண்ணில் இந்த மீன் சிக்கியுள்ளது.
 
தன்னால் நிச்சயம் ஆட்டுத்தலை மீனை பிடிக்கமுடியும் என்று நம்பியதாகவும் ஆனால் அதிசயமாய் அது மனித பற்களுடன் காட்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
"இது ஒரு நல்ல வேட்டை. இந்த மீன் அற்புதமான சுவையுடன் இருக்கும்" என செய்தித் தளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார் மார்டின். இந்த மீனின் புகைப்படம் #bigteethbigtimes என்ற ஹேஷ்டேகுடன் பகிரப்பட்டுள்ளது.
 
இது குறித்து சமூக வலைதளங்களில் பலர் வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். "இங்கிருந்துதான் பற்கள் வந்ததா" என பயனர் ஒருவர் வினவியுள்ளார். இந்த மீனின் பற்கள் எனது பற்களை காட்டிலும் அருமையாக உள்ளது என மற்றொரு பயனர் கிண்டலாக பேசியுள்ளார்.