1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:04 IST)

உணவகத்தில் நிர்வாணமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர்: 4 பேர் பலி

அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் நிர்வாண வாலிபர் ஒருவர் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவில் உள்ள ஆண்டியோக் நகரத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் வாஃபிள் ஹவுஸ் என்ற உணவகத்தில், நிர்வாண நிலையில் அத்துமீறி உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார்.
 
இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் அந்த நபரின் துப்பாக்கியை கைகளில் இருந்து பறித்தார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடினான்.
 
இது தொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்திய நபரின் பெயர் ட்ராவிஸ் ரெய்ன்கிங் என்றும், அவன் ஏற்கனவே வெள்ளை மாளிகையில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.