ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கம்: எக்ஸ் தளத்தின் எலான் மஸ்க் நடவடிக்கை..!
சமூக வலைதளங்களில் ஒன்றான எக்ஸ் தளம் ஒரே மாதத்தில் 2 லட்சம் இந்தியர்கள் கணக்குகளை நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது
கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 2.13 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
சட்ட விரோத செய்திகள் பரப்புதல், பாலியல் காணொளிகளை பரப்புதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் ஆயிரத்திற்கும் மேலான இந்தியர்களின் கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசிடம் எக்ஸ் தளம் குற்றம் சாட்டியுள்ளது
மேலும் ஐயாயிரத்துக்கும் அதிகமான கணக்குகள் மீது புகார் பெறப்பட்டு உள்ளதாகவும், அந்த கணக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது
ஒரே மாதத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran