1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜூலை 2019 (09:00 IST)

பாகிஸ்தானில் இன்னும் 40,000 பயங்கரவாதிகள் –ஒத்துக்கொண்ட இம்ரான் கான் !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் நேற்று பேசும்போது பாகிஸ்தானில் இன்னமும் 40,000 பயங்கரவாதிகள் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் நேற்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். அப்போது ‘நாங்கள் ஆட்சிக்கு வரும் வரை பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க எங்களுக்கு முன் இருந்த எந்த அரசுக்கும் தைரியம் இல்லை. பாகிஸ்தானில் இன்னும் சுமார் 30,000 முதல் 40,000 ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் காஷ்மீர் மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள்.

பயங்கரவாதிகள் நிறுவியுள்ள பெரும்பாலான முகாம்களையும், பயிற்சி முகாம்களையும் கைப்பற்றியுள்ளோம். 9/11 சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போரில் வெற்றியடைய பாகிஸ்தான் உதவும் என்று அமெரிக்கா எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் அப்போது நாங்கள் எங்களது பிரச்சினைகளுக்காகவே கடுமையாக போராடிக்கொண்டு இருந்தோம்’ எனக் கூறியுள்ளார்.