செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (21:51 IST)

குரங்கு அம்மை வைரஸ்...தென் கிழக்கு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

monkey virus
இந்தியாவில்  குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள  நிலையில் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஆப்பிரிக்காவில் மட்டுமே இந்த நோய் அறிகுறி கண்டறியப்பட்டாலும், தற்போது ஆப்பிரிக்க தொடர்பு இல்லாமலே பல பகுதிகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.,

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  4  நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு  நட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மைத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில்,இந்தியாவில்  குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ள  நிலையில்ம் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பில் தென் கிழக்கு ஆசிய பகுதி இயக்குனர் பூனம் சிங்,  குரங்கு   நோய்த்தொற்றைக் குறைக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு உதவும் எனத் தெரிவித்துள்ளார்.