பியர் கிரில்ஸை ஓவர் டேக் செய்த மோடி..
”மேன் வெர்சஸ் வைல்டு” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அந்நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸையே ஓவர் டேக் செய்துள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி டிஸ்கவரி சேன்னலில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, பியர் கிரில்ஸுடன் பல சாதனைகள் செய்தார்.
இந்நிகழ்ச்சியை குறித்து தெற்கு ஆசிய டிஸ்கவரி நெட்வொர்க்கின் இயக்குனர் மேகா டாடா கூறுகையில்,
“இது வரை ’மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் 37 லட்சம் பேரை தாண்டியது இல்லை. ஆனால் பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை இதுவரை 1 ½ கோடி பேர் பார்த்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து டி.வி.நிகழ்ச்சிகளை பார்த்தவர்களில் 93 % பேர் டிஸ்கவரி சேன்னலை பார்த்துள்ளனர். இதன் மூலம் டிஸ்கவரி சேன்னல் டாப் லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக முதல் ஒளிபரப்பு மற்றும் மறு ஒளிபரப்பு என மொத்தமாக “மேன் வெர்சஸ் வைல்டு” நிகழ்ச்சியை 4.2 கோடி பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.