மந்தநிலைக்கு இதுதான் காரணம் – அமைச்சர் எம்.சி சம்பத் கருத்து
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள வியாபார மந்தநிலைக்குக் காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் எம்.சி சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஆட்டோமொபைல்ஸ் துறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து முன்னணி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் தங்கள் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சமீபத்தில் அளித்த நேர்காணலில் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இந்த மந்தநிலைக்கான காரணங்கள் என்ன என்பது குறித்த் கேள்விக்கு ’ 16 லட்சம் கார் உற்பத்தியாகிறது. வீட்டுக்கு 4 கார்கள் உள்ளன. அனைவரும் ஈஎம்ஐ கட்டி கார் வாங்குகின்றனர். மின்சார வாகனம் வரவுள்ளதும் தற்போதுள்ள மந்தநிலைக்கு ஒரு காரணம். வங்கிகள் கடன் கொடுப்பது குறைந்தும் இந்த மந்த நிலைக்குக் காரணம்’ எனத் தெரிவித்துள்ளார்.