புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (07:50 IST)

பிரதமர் மோடி- கமலா ஹாரீஸ் முக்கிய பேச்சு: அமெரிக்காவில் இருந்து வருகிறது தடுப்பூசிகள்!

இந்தியாவில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவி செய்து வருகின்றனர் அந்த வகையில் அமெரிக்கா இந்தியாவுக்கு கடந்த சில மாதங்களாகவே தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அளித்து உதவி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் பிரதமர் மோடியிடம் நேற்று தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இந்த உரையாடலின்போது இந்தியாவிற்கு தேவையான தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் கொரோனாவுக்கு பின் இந்தியாவில் சுகாதார மற்றும் பொருளாதாரத்தை மீட்க தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது 
 
மேலும் இருநாட்டு நல்லுறவு குறித்து மோடி மற்றும் கமலா பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் தடுப்பூசி இந்தியாவுக்கு இன்னும் சில நாட்களில் இறக்குமதி செய்யப்படும் என தெரிகிறது