செவ்வாய், 30 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (18:33 IST)

மாடல் அழகியின் உயிரை குடித்த பிளாஸ்டிக் சர்ஜரி....

மாடல் அழகியின் உயிரை குடித்த பிளாஸ்டிக் சர்ஜரி....
தொடர்ச்சியாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து வந்த மாடல் அழகி கிறிஸ்டினா மார்டெல்லி, சமீபத்தில் செய்த சர்ஜரியின் போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.


 

 
கனடா நாட்டை சேர்ந்த கிறிஸ்டினா தனது அழகை மெருகேற்ற தனது 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது உதடு, மார்பு, பின்புறம் ஆகியவற்றை வித்தியாசமகாவும், பெரிதாகவும் அவர் மாற்றினார்.
 
இதுவரைக்கும் இவர் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சர்ஜரிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாடல் அழகியின் உயிரை குடித்த பிளாஸ்டிக் சர்ஜரி....

 

 
அந்த சிகிச்சை செய்வதையே ஒரு பொழுது போக்காகவே அவர் கடைபிடித்தார். மேலும், அப்படி செய்வது தனது உடலழகை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் அவர் கூறிவந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு மீண்டும் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அப்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.
 
எதை அவர் விரும்பி செய்து வந்தாரோ, அதுவே அவரின் உயிரை குடித்து விட்டது. இந்த செய்தி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், இவரைப் போல் அடிக்கடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

மாடல் அழகியின் உயிரை குடித்த பிளாஸ்டிக் சர்ஜரி....

 

 
இவரின் மறைவையடுத்து இவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.