1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Minister L Murugan says about RSS

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நேருவால் கூட ஒழிக்க முடியவில்லை: மத்திய அமைச்சர் எல் முருகன்

Murugan
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நேரு ஒழிக்க முயற்சி செய்தார் என்றும் ஆனால் அவரால் முடியவில்லை என்றும் மத்திய அமைச்சர்கள் எல் முருகன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆர்எஸ்எஸ் குறித்து திராவிடக் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதும் அதற்கெல்லாம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் முருகன் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நேரு ஒழிக்க நினைத்தார் என்றும் ஆனால் அவரால் கூட ஒழிக்க முடியவில்லை என்றும் தனி மனிதர்களால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஒழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆர்எஸ்எஸ் இயக்கம் நேற்று வந்த இயக்கம் அல்ல என்றும் பல லட்சம் தொழிலாளர்கள் தியாகம் செய்தவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்களின் ஆர்எஸ்எஸ் குறித்த இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்
தீபாவளிக்கு காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி..! சீட்டு நடத்தியவர் தலைமறைவு!