திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (11:46 IST)

தீபாவளிக்கு காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி..! சீட்டு நடத்தியவர் தலைமறைவு!

சேலத்தில் தீபாவளிக்கு சீட்டு நடத்திய நபரிடம் மக்கள் பலர் பணம் கட்டியிருந்த நிலையில் அவர் தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பலர் தீபாவளி செலவுகளுக்காக கடன் வாங்குவது, சீட்டு எடுப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சேலத்தில் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வெள்ளி மற்றும் தங்க நகை செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார்.

இவர் அப்பகுதி மக்களிடையே சிறுசேமிப்பு சீட்டு, ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு போன்றவற்றையும் நடத்தி வந்திருக்கிறார். சமீபத்தில் தீபாவளிக்காக 52 வார தீபாவளி சீட்டை நடத்தியுள்ளார். பணத்தேவைக்காக மக்கள் பலரும் இவரிடம் சீட்டு கட்டியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் சீட்டு முடிவடைந்த நிலையில் யாருக்கும் பணம் தரப்படவில்லை என தெரிகிறது.

இதனால் சீட்டு கட்டியவர்கள் ராமமூர்த்தியிடம் கேட்டபோது திங்கட்கிழமை சீட்டு பணத்தை தருவதாக கூறியுள்ளார். அதற்கு பின் ராமமூர்த்தி குடும்பத்தினர் மொத்தமாக தலைமறைவாகி விட்டனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Edired By: Prasanth.K