1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:58 IST)

#Trending மைக் டைசன் குத்து பாத்துருக்கியா..? பயணியை வாயிலேயே குத்திய டைசன்!

Mike Tysson
விமானத்தில் ஓவராய் பேசிய பயணியை பிரபல குத்து சண்டை வீரர் மைக் டைசன் வாயிலேயே குத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் பிரபலமான குந்து சண்டை வீரர் மைக் டைசன். சமீபத்தில் மைக் டைசர் வெளியூர் செல்வதற்காக சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் ஏறியுள்ளார். அங்கே பின் சீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் மைக் டைசனை தொந்தரவு செய்யும் வகையில் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

மைக் டைசன் அவரை அமைதியாக இருக்கும்படி சொல்லியும் கேட்காத இளைஞர் டைசன் காதருகே சென்று கத்தியுள்ளார். இதனால் கடுப்பான மைக் டைசன் அந்த இளைஞரை முகத்திலேயே நங் நங்கென்று குத்தியுள்ளார்.

இதனால் தலையில் இளைஞருக்கு ரத்தம் வந்துள்ளது. பின்னர் விமானத்திலிருந்து டைசன் இறங்கி சென்று விட்டாராம். இந்த வீடியோ ட்ரெண்டாகி வரும் நிலையில் டைசனிடம் அடி வாங்கிய இளைஞர் பாவமாக கொடுக்கும் போஸ் வைரலாகியுள்ளது.