திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (22:58 IST)

உக்ரைனை சேர்ந்த 60 வீரர்களை விடுவித்த ரஷ்யா

Ukraine
உக்ரைனை சேர்ந்த 60 வீரர்களை ரஷ்யா ராணுவம் விடுவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஸ்யா போர் தொடுத்து வருகிறது. இதில், இரு  நாட்டு தரப்பினும் ஆயிரக்கணக்கான வீரர்கள்  உயிரிழந்துள்ளனர். அப்பாவி மக்களும் பலயாகி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனைச் சேர்ந்த மரியுபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

தீவிரமாக இரு நாடுகளும் போரிட்டு வரும்   நிலையில்  உக்ரைன் ராணுவத்தினரை சரணடையும்படி  ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் போர்க்கைதிகள் 19 பேரை  ரஷியா விடுவித்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று ஏற்கனவே  60 பேரை சேர்த்து மொத்தமாக 76 உக்ரைன் வீரர்கள் தங்கள்  வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.