1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (22:31 IST)

மைக்கேல் ஜாக்சன் இன்னும் உயிருடன் இருக்கின்றாரா? அதிர்ச்சி தகவல்

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009ஆம் ஆண்டு காலமானார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் காலமாகி 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் திடீரென மைக்கேல் ஜாக்சன் மரணம் அடையவில்லை என்றும் அவரைப் போலவே உள்ள ஒருவர் தான் மரணமடைந்தார் என்றும் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் என்றும் அவரது ரசிகர்கள் தெரிவித்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
சமீபத்தில் அர்ஜென்டினாவை சேர்ந்த செர்ஜியோ என்பவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கும் அவர் மைக்கேல் ஜாக்சனின் பாடல்களைப் பாடி அவரை போலவே நடனமாடியது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது
 
இதனை அடுத்து ஒரு சில ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் இவர்தான் உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்றும் 2009 ஆம் ஆண்டு இறந்தவர் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்றும் செர்ஜியோவை டிஎன்ஏ சோதனை செய்தால் அது தெரியவரும் என்றும் கூறியுள்ளனர் 
 
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த செர்ஜியோ, ‘தான் உண்மையா நான் மைக்கேல் ஜாக்சன் இல்லை என்றும் ஒரு முறை செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்தபோது தான் மைக்கேல் ஜாக்சன் போலவே இருப்பதால் மைக்கேல் ஜாக்சன் வேடமணிந்து பேட்டி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அதனை அடுத்து தான் மைக்கேல் ஜாக்சன் வேடமிட்டு பேட்டி கொடுத்ததாகவும் இந்த வீடியோ தான் வைரலாகி நான் தான் மைக்கேல் ஜாக்சன் என்று புரளியைக் கிளப்பி விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் டிஎன்ஏ பரிசோதனை செய்யவும் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது