ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (12:39 IST)

அமமுக நிர்வாகி வெட்டிக்கொலை! – மதுரையில் பரபரப்பு!

மதுரை அருகே அமமுக கட்சி நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலூர் அருகே உள்ள வல்லாளப்பட்டியை சேர்ந்தவர் அசோகன். முன்னாள் கூட்டுறவு சங்க தலைவரான அசோகன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார்.

இன்று காலை வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த அசோகனை மர்ம நபர்கள் சுற்று வளைத்துள்ளனர். அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அசோகனை பலமாக தாக்கியதில் அவர் இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அந்த கும்பல் தப்பி சென்று விட்டிருக்கிறது.

உடனடியாக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அசோகன் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்துள்ளது. அசோகனை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? அசோகன் கொலை செய்யப்பட்டது சொந்த பிரச்சினையாலா? அல்லது அரசியல் பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.