ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2018 (11:30 IST)

விமானத்தை திருடி ஓட்ட தெரியாமல் வெடிக்க விட்ட மெக்கானிக்!

அமெரிக்காவில் விமானத்தை திருடிய மெக்கானிக் ஒருவர் அதை ஓட்ட தெரியாமல் ஓட்டி நடுவானத்தில் வெடித்த சம்பவம் கேட்பதற்கு கேலியாக இருந்தாலும் இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
வழக்கமாக இருகச்சகர வாகனங்கள், கார் போன்றவற்றி திருடி செல்லும் வீடியோக்களை இணையத்தில் நாம் பார்த்திருக்ககூடும். ஆனால், அமெரிக்காவில் விமானத்தையே ஒருவர் திருடி சென்றுள்ளார். 
 
அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 
 
நேற்று மாலை அந்த விமானத்தில் மெக்கானிக் ஒருவர், பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாரக்காத வகையில் அந்த விமானத்தை ஒட்டிச் சென்றார்.
 
இது குறித்தி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த விமானம் பறக்கும் பாதை கண்காணிக்கப்பட்டு, ராணுவ விமானம் அதை விரட்டிச்சென்றது.
 
அந்த மெக்கானிக்கிற்கு விமானம் ஓட்ட தெரியததால் விமானத்தை கடுப்படுத்த முடியாமல் தவித்தார். ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறியதில் மெக்கானிக் உயிரிழந்தார். 
 
இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நடந்ததால், இது குறித்த விசாரணைக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.