1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (19:38 IST)

பாதுகாப்புத் தொகையை அதிகரித்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்ஜூகர் பெர்க்

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்  நிறுவனங்களின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கில் பணி நீக்கப்பட்ட  நிலையில் அதன் தலைவர் மார்க் ஜூகர்பெர்க்கின் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக செலவு தொகை அதிகரித்துள்ளது.

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு மிகப்பெரிய தொகைக்கு வாங்கியதுடன், அதன் சிஇஓ உள்ளிட்ட அதிகாரியகள் பணியாளர்களை பணி நீக்கம் செய்தார்.

இதையடுத்து, உலகம் முழுவதும் உள்ள முக்கிய ஐடி  நிறுவனங்களில் வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குறிப்பா,கூகுள், யாகூ, அமேசான்,மைக்ரோசாப்ட்  உள்ளிட்ட நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை ஆயிரக்கணக்கில் பணி நீக்கம் செய்தனர்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராம், பேஸ்புக்  நிறுவனங்களும் தங்கள் பணியாளர்கள் 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது.

இந்த நிலையில், ஃபேஸ்புக் , மெட்டா நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி மார்க் ஜூகர்பெர்க்  தன் குடும்பத்திற்கு வழங்கப்படும் பாதுக்காப்புத் தொகையை ரூ.33.08 கோடியில் இருந்து ரு.116 கோடியாக அதிகரித்துள்ளார் என்று  தகவல் வெளியாகிறது.